கோரை களைக்கொல்லி, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்கை
இயற்கையில் கோரை, அருகு போன்ற களைகளை அழிக்கும் களைகொல்லி ======================== களைகொல்லி எவ்வாறு தயார் செய்வது : மாட்டு கோமியம் கடுக்காகொட்டை எலுமிச்சம்பழம் - இவை மூன்றையும் கலந்து தயார் செய்யவேண்டும் செய்முறை 13௦ லிட்டர் நாட்டு மாடு கோமியத்தை சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் உற்றி மழை, வெய்யல்படாமல் ஒரு மாதம் வைத்திருக்கவும். தொட்டியின் மேல் பகுதியை சணல் சாக்கு கொண்டு மூடி வைக்கவும். 3 கிலோ கடுக்காய் கொட்டை( பொடியாக வாங்க கூடாது) வாங்கி ( கிலோ 80 ரூபாய்க்கு கிடைக்கிறது) அதை இடித்து வைத்து கொள்ளுங்கள். 1௦ லிட்டர் கோமியம் (சேகரித்து ஒரு மாதத்த ிற்கும் மேல் ஆனது) எடுத்து அதை பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி அத்துடன் இடித்து வைத்த கடுக்காய் கோட்டையை கொட்டி நன்றாக கலக்கவும். அத்துடன் 1௦ எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும். எலுமிச்சை பழதோலையும் அந்த கலவையில் போட்டு கலக்கவும். இவற்றை 15 நாட்கள் ஊற விடுங்கள். தினமும் இரண்டு முறை கலக்கி விட வேண்டும். தெளிப்புமுறை- 15 நாட்கள் ஊற வைத்த கடுக்காய், எலுமிச்சை கலந்த கலவையை துணியில...